சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் தங்கப்பதக்கத்தை வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு திருவள்ளூரை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் அமைந்துள்ளது இந்த நீச்சல் குளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி சாரா சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த கட்டணத்தில் தனியாரை விட நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கும் இந்த மாவட்ட நீச்சல்குளத்தில் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சர் விளையாட்டு கோப்பை நீச்சல் போட்டி நடைபெற்றது இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீச்சலடி மையங்களில் பயிற்சி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருவள்ளுவர் வி.எம் நகரைச் சேர்ந்த வினோத் என்பவரின் மகன் பிரணவ் (8) கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்று தேர்வாகியுள்ளார். இதில் தங்கப்பதக்கம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகளை பெற்ற மாணவன் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கூறும்போது தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்காக பல்வேறு சீரிய திட்டங்களை தீட்டி வருகிறது இந்த திட்டங்கள் மூலம் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.
தற்போது இந்த மாவட்ட நீச்சல் குளத்தில் குறைந்த கட்டணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர் பயிற்சியாளர் லோகேஷ் தினசரி பயிற்சி அளித்து வருகிறார் இந்த நீச்சல்குளம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை தனியார் நீச்சல் பயிற்சி மையங்களை விட இங்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது மேலும் இங்கிருந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மேலும் மேலும் தனது இலக்கை விரிவுபடுத்தி வரும்போது தற்காலத்தில் கல்வியில் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற முடியும் அதன் மூலம் நல்ல அரசு பணிகளிலும் சேர முடியும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் மேலும் அரசு தரப்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நடத்தப்படுகின்றது தற்போது முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர்பங்கேற்றனர்.
அதில் பிரணவ் என்ற சிறுவன் தங்கப்பதக்கம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் மேலும் நீச்சல் போட்டி என்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான போட்டி ஆகும் மேலும் அவசர காலத்தில் உயிர் காக்க உதவும் ஒரு கலையாகும் இந்த கலையை கற்பதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மன உறுதியும் பலம்பெறும் எனவே விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

திருவள்ளூரில் இருந்து எஸ். நாகராஜ்,