சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்!

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய இறையாண்மையை பாதுகாப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட கொங்கு நாடு மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஈஸ்வரன், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இறுதியில்
“இந்த ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை உபயோகப்படுத்தவில்லை; தமிழகம் தலைநிமிர்ந்து விட்டது” என்று பேசினார்.

இதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும், காங்கிரஸ் கட்சியும், அதிமுகவும், பாஜகவும் மௌனம் காத்ததாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தன் சித்தாந்தத்தில் இருந்து விலகி செல்கிறதா?”, “ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்த கோரியும், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க கோரியும் அவரை நாடு கடத்த கூறியும் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் பாலா, குடந்தை நகர தலைவர் பிரபாகரன், ‌இளைஞரணி மாவட்ட தலைவர் விஜய், திருவிடைமருதூர்
ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார், ஆலய பாதுகாப்பு பிரிவு வேல்முருகன், இந்து முன்னணியின் முன்னாள் நகர தலைவர் ராஜா, தஞ்சை மாவட்ட பூசாரிகள் பேரவை அமைப்பாளர் கார்த்திக், தஞ்சை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தர்மா முத்துக்கிருஷ்ணன், கார்த்தி, ஜீவா ,அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started